இந்த நிலையில் சமீபத்தில் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. தேர்தல் பணியில் இருக்கும் தேர்தல் அலுவலகர்கள், காவலர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை பதிவு செய்தனர். இந்த நிலையில் தபால் வாக்குப்பதிவின்போது தேர்தல் விதிகளை மீறி காவலர்களிடம் பிரசாரம் செய்ததாக மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது