ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழப்பு: நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்த தாயார்..!

Mahendran

வியாழன், 20 ஜூன் 2024 (14:10 IST)
நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த நிலையில் அவருடைய தாயார் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாமக்கல் மாவட்டத்தில் தனியார் உணவகத்தில் மாணவி கலையரசி என்பவர் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட நிலையில் திடீரென அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார். இந்த நிலையில் தனது மகள் கலையரசி மட்டுமின்றி இதே போன்ற பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அடையாளம் தெரியாத தனது மகள் உள்பட 43 நபர்களுக்கும் சேர்த்து 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உயிரிழந்த மாணவி கலையரசின் தாயார் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
 
கலையரசி தாயாரின் இந்த வழக்கை பொதுநல வழக்காக நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து ஜூலை 19ஆம் தேதி ஷவர்மா உணவக உரிமையாளர், மாவட்ட ஆட்சியர், உணவு பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்