அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை: ஆர்.எஸ்.பாரதி

வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (14:43 IST)
முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்பட திமுக பிரபலங்களின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டார். இந்த நிலையில் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார் 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திமுக சொத்து பட்டியலுக்கான ஆதாரங்களை அவர் 15 நாட்களில் வெளியிட வேண்டும் என்றும் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். 
 
மேலும் யார் யார் பெயரில் அவதூறு பரப்பினாரோ அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் திமுக அமைச்சர்கள் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை என்றும் தமிழக முழுவதும் நீதிமன்றங்களுக்கு அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்வார் என்றும் அண்ணாமலையின் அறியாமையை பார்த்தால் ஐபிஎஸ் எப்படி ஆனார் என்று சந்தேகம் வருகிறது என்று ஆர் எஸ் பாரதி தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்