கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. அந்த மாவட்ட விவசாயிகள் கிட்டதட்ட 10 வருடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் வாழ்வாதாரங்களான தென்னை, பனை, வாழை, சவுக்கு, மா, பலா மரங்களை பறிகொடுத்து வாழ வழியின்றி நிற்கதியாய் தவிக்கின்றனர். பல்வேறு இடங்களுக்கு மக்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினாலும் சில இடங்களில் உள்ள மக்களுக்கு இன்னும் உதவிகள் போய் சேராமல் உள்ளது.
இந்நிலையில் திருத்துறைப்பூண்டியில் உள்ள கிராமத்தில், நபர் ஒருவர் எடுத்து சென்ற உணவை பெறுவதற்காக சிறுவன் கரையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வந்து சாப்பாட்டு தட்டை வாங்கி சாப்பிட்ட காட்சி கண்கலங்க வைத்தது. இவர்களின் இந்த நரக வாழ்க்கை விரைவில் சீரமைய வேண்டும்.