ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாள் ரிசல்ட் நேற்று வெளியான நிலையில் அதில் இரண்டு சதவீத பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பு எடுக்க ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவு நேற்று வெளியானது. 4,01,986 பேர் இந்த தேர்வை எழுத பதிவு செய்த நிலையில் இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு பணிகளில் பாடம் எடுக்க தகுதி கிடைக்கும் என்பது குறித்து குறிப்பிடத்தக்கது.