தமிழகத்தில் கொரோனா பாதித்தோரில் 91% பேருக்கு XBB வகை தொற்று: அதிர்ச்சி தகவல்..!
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (18:18 IST)
தமிழகத்தில் கொரோனா பாதித்தோரில் 91% பேருக்கு XBB வகை தொற்று உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 91 சதவீத பேருக்கு XBB வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி முதல் மார்ச் வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 144 பேர்களில் 86 மாதிரிகள் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் 144 பேர்களில் 131 பேர்களுக்கு XBB வகை கொரோனா தொற்றும், 10 பேர்களுக்கு BA.2 வகை தொற்றும், 2 பேர்களுக்கு BA.5 வகை கொரோனா தொற்றும், ஒருவருக்கு B.1.1 வகை கரோனா தொற்றும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.