காரைக்காலை அடுத்து தூத்துக்குடியில் கொரோனாவிற்கு ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (10:54 IST)
நேற்று காரைக்குடியில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒருவர் பலியான நிலையில் இன்று தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பாக காரணமாக ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரின் பெயர் பார்த்திபன் என்றும் அவருக்கு கொரோனா வைரஸ் மட்டும் இன்றி இணை நோய் பாதிப்பு இருந்ததாகவும் மருத்துவமனை தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
 
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்