அப்போது அவ்வழியாக வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணமின்றி 9 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அனைத்தையும் திருச்செந்தூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.