கவுன்சிலிங் முடிந்தும் காலியாக உள்ள 83 எம்பிபிஎஸ் இடம்.. தமிழ்நாடு அரசு முக்கிய கோரிக்கை..!

வெள்ளி, 13 அக்டோபர் 2023 (12:46 IST)
நான்கு சுற்றுகள் கவுன்சிலிங் முடிந்தும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய எம்பிபிஎஸ் இடங்களில், 83 இடங்கள் நிரம்பவில்லை என்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் காலியாக உள்ள இடங்களை மாநிலங்களுக்கு திரும்ப வழங்க மாட்டோம் என்ற மருத்துவ கவுன்சிலிங் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் 83 எம்பிபிஎஸ் இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்திற்கு தமிழ்நாடு மருத்துவத்துறை கடிதம் எழுதியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ இடங்கள் வீணாவதை தடுக்க வலியுறுத்தியும், காலியாக உள்ள இடங்களை மாநிலத்திற்கு வழங்கவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் அந்த இடங்கள் தமிழகத்திற்கு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்