பிரபல கட்டுமான நிறுவன அலுவலகங்களில் வருமான வரி சோதனை - 80 கோடி ரூபாய் பறிமுதல்

திங்கள், 16 ஜூலை 2018 (12:22 IST)
பிரபல கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனையில் 80 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் தமிழக அரசுக்கு  முட்டை, பருப்பு, சத்துமாவு உள்ளிட்ட அத்தியாவச பொருட்களை விநியோகிக்கும் கிறிஸ்டி நிறுவனம் 1350 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் தமிழகத்தில் சாலைப்பணிகள் உள்ளிட்ட அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் தற்பொழுது அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
 
சென்னை, மதுரை மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அந்த நிறுனத்திற்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதலே அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வரும் இந்த சோதனையில் இதுவரை 80 கோடி ரூபாய் ரொக்கம், பல்வேறு சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
எனினும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதனால், சோதனை நிறைவுற்ற பிறகே, முழு விவரமும் வெளியாகும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்