ரூ.91,480 கோடி கடன்: நஷ்டத்தில் காலம் கடத்தும் ஏர்டெல்....

புதன், 1 நவம்பர் 2017 (13:52 IST)
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் ரூ.91,480 கோடி கடனுடன் நஷ்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
ஏர்டெல் நிறுவனத்தின் செப்டம்பர் மாத காலாண்டு நிகர லாபம் 4 சதவீதம் சரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் ரூ.1,461 கோடியாக இருந்தது.
 
தற்போது அதன் லாபம் ரூ.343 கோடியாக உள்ளது. இதோடு ஏர்டெல்லின் மொத்த வருமானமும் 10 சதவீதம் குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்திய பிரிவின் வருமானம் 13 சதவீதம் சரிந்திருக்கிறது.
 
செப்டம்பர் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் கடன் ரூ.91,480 கோடியாக இருக்கிறது. இவை அனைத்திற்கு மத்தியிலும், ஏர்டெல் மொபைல் டேட்டாவின் பங்கு 4 மடங்கு வளர்ந்திருக்கிறது. 
 
தற்போது தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டு இருக்கும் நெருக்கடி காரணமாக பல நிறுவனங்கள் சந்தையை விட்டு வெளியேறும் சூழலில் ஏர்டெல் தன்னுடைய சந்தையை உயர்த்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்