500 ரூபாய் லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு 8 ஆண்டுகள் சிறை!

ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (13:28 IST)
ரூ.500 லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு ஈரோடு நீதிமன்றம்  8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டியாளையத்தில் மேக்லீன் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதன் ஆலோசகரான புஷ்பராஜ் ஆண்டுதோறும் இல்லத்தின் வரவு-செலவு கணக்கை சார் பதிவாளரிடம் ஒப்புதல் பெற்று, மாவட்ட பதிவாளரிடம் சமர்பித்து வந்தார். 
 
இந்நிலையில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சார் பதிவாளராக இருந்த தங்கவேல் என்பவரிடம் புஷ்பராஜ் வரவு செலவு கணக்கை சமர்பித்துள்ளார். ஆனால் ஒப்புதல் அளிக்க தங்கவேல், புஷ்பராஜிடம்  ரூ.500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் மறைந்திருந்து தங்கவேல் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடித்தனர்.
  
இந்தவழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால்,   ஈரோடு முதன்மை நீதிமன்றம் சார் பதிவாளர் தங்கராஜிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து அதிரடியாக தீர்ப்பளித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்