கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று வெனிசுலா நாட்டை சேர்ந்த இளைஞர் கார்லி சபரியேல் காஸ்போ(36) வந்தார். அந்த வாலிபரின் நடையில் வித்தியாசம் தெரியவே, விமான நிலைய அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசவே, விமான நிலைய அதிகாரிகள் அவரை சோதனைக்கு உட்படுத்தினர். சோதனையின் முடிவில், வாலிபர் போதைப் பொருளை வயிற்றுக்குள் வைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.