இந்நிலையில், திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கல்வி பயின்ற 8 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 20 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பள்ளி மற்றும் விடுதிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளத்தாக திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.