மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேச அணி அபார வெற்றி.. அரையிறுதிக்கு தகுதியா?

Siva

புதன், 24 ஜூலை 2024 (20:59 IST)
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் கோப்பை தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மலேசியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின.

இதில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது.  இதனை அடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மலேசியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 77 ரன்கள் மட்டும் எடுத்ததால் 114 நாட்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தற்போது இலங்கை மற்றும் தாய்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முடிவை பொறுத்து தான் அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் மோதும் இரண்டு அணிகள் எது என்பது முடிவு செய்ய முடியும்

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்