சென்னையில் 63 மசாஜ் சென்டர்களுக்கு சீல்: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (09:46 IST)
சென்னையில் அறுபத்திமூன்று மசாஜ் சென்டர்களை காவல்துறை சீல் வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த புகாரை அடுத்து காவல்துறையினர் அதிரடியாக அனைத்து சென்டர்களிலும் சோதனை நடத்தினர் 
 
கீழ்ப்பாக்கம், தி நகர், அண்ணா நகர்,வடபழனி, அடையார், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள மசாஜ் சென்டர்களில் சோதனை நடத்தியதில் 63 மசாஜ் சென்டர்கள் உரிமம் இல்லாமல் இயங்கி வந்தது தெரியவந்தது
 
இதனை அடுத்து அந்த அறுபத்திமூன்று மசாஜ் சென்டர்கள் காவல்துறையினர் மூடி சீல் வைத்தனர். மேலும் இதில் 43 மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் 5 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்