கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சென்னையில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள்!

வியாழன், 22 டிசம்பர் 2022 (15:03 IST)
கிறிஸ்மஸ் பண்டிக்கையொட்டி, பொதுமக்கள் செல்ல, சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையொட்டி சென்னை மா நகரில் இருந்து  பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டும்.
 
அதன்படி, இம்முறை கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, சென்னையில் இருந்து பொதுமக்கள் செல்ல, 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
 
மேலும், வெள்ளிக்கிழமை 300 சிறப்புப் பேருந்துகளும், சனிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்