தன்பாலின ஈர்ப்பாளர்களை குறிவைத்து பணம் பறித்து வந்த 6 பேர் கைது!

Sinoj

சனி, 20 ஜனவரி 2024 (20:37 IST)
தூத்துக்குடியில் தன்பாலின  ஈர்ப்பாளர்களை குறிவைத்து பணம் பறித்து வந்த  6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு டேட்டிங் செயலி பயன்படுத்துபவர்களை நேரில் வரவழைத்து, அவர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்து பணம் பறித்த 4 சிறார்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் மேலும்  இரண்டு பேருக்கு போலீஸார் வலைவீசி வருகின்றனர்.

மேலும், செல்போன் செயலியில் டேட்டிங் செய்து வந்தவர்களை இவர்கள் தொடர்பு கொண்டு,  பணம் பறிந்து வந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த கும்பலை போலீஸார் கைது  செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்