தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வரும் நிலையில் சமீபத்தில், தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.
இந்த நிலையில், இன்று, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
சென்னை, தருமபுரி, செங்கல்பட்டு, தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி,கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.