மெட்ரோ ரயில் சேவை இன்று மட்டும் அதிகரிப்பு! – பயணிகள் கவனத்திற்கு!

வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (09:52 IST)
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதால் மெட்ரோ சேவை இன்று நீட்டிக்கப்பட்டுள்ளது.



சனி, ஞாயிறை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியும் வருவதால் தொடர் விடுமுறை காரணமாக பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்படுவதால் 800 சிறப்பு பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.

மேலும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் செல்வோருக்காக இன்று மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு நேரத்தில் கடைசி ரயில் சேவை இன்று 10 மணி வரையிலும் இருக்கும். சாதாரணமாக இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் 9 நிமிட இடைவேளையில் இயக்கப்படும் நிலையில் இன்று 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்