தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா : மொத்தம் 1,323 பேராக உயர்வு !!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (18:53 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவிவருகிறது. கொரோவைத் தடுக்க இந்திய அரசு வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே,   கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துள்ளதாக  தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 சென்னையில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 228ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை  தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 180லிருந்து 283ஆக உயர்ந்துள்ளது.

மேலும்,  தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதல் 5 மாவட்டங்கள் இவை :

சென்னை - 228
கோவை – 127
 திருப்பூர் – 80
 ஈரோடு - 70
நெல்லை – 66

கொரோனா பாதிப்பில் இருந்து 103 பேர் இன்று மீட்கப்பட்டு திரும்பியுள்ளன் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்