கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வரும் 19 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அ.தி.மு.க., தி.மு.க, மக்கள் நீதி மையம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என்று 68 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று தனது பிரச்சாரத்தினை அ.தி.மு.க கட்சியானது., கொடையூர் ஊராட்சியில் சுக்கராம்பட்டி, மலையூர், கே.வெங்கடாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நாகம்பள்ளி ஊராட்சியில் மலைக்கோவிலூர், லிங்கத்துப்பாறை, மூலப்பட்டி, ஒந்தாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தினை துவக்கியது.
வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். அப்போது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி படிதான் இந்த எடப்பாடியார் ஆட்சி நடந்து வருவதாகவும், ஜெயலலிதாவின் திட்டங்களை அவர்களின் பெயரில் பல திட்டங்களை உயர்த்தி தருவதாகவும், தெரிவித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஏற்கனவே இந்த வேட்பாளர் அ.தி.மு.க வில் கடந்த 2011 ம் ஆண்டில் போட்டியிட்டதாகவும், அப்போதைய காலத்தில் செந்தில் பாலாஜியின் சதியினாலும், எதிர்கட்சியின் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் இணைந்து திட்டம் தீட்டி இந்த வேட்பாளரை தோற்கடித்தார்கள்.
ஆனால் தற்போது ஜெயலலிதாவின் மறைவிற்கு காரணமான முதல் குற்றவாளியான தி.மு.க வில் ஐக்கியம் ஆகியுள்ள செந்தில் பாலாஜி ஆட்சி சுகத்திற்காக பல்வேறு கட்சிகள் மாறி வருவதாகவும், இந்த போக்கினை மக்கள் நன்கு அறிந்த வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் அளிக்குமாறும், ஏற்கனவே கடந்த 2011 ம் ஆண்டில், செந்தில் பாலாஜியினால் தோற்கடிக்கப்பட்ட செந்தில்நாதனை சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற வைக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.