50க்கும் மேற்பட்ட போலி பேஸ்புக் கணக்கு.. ஆபாச சாட்டிங் மூலம் பெண்களுக்கு தொல்லை.. இளைஞர் கைது..!

புதன், 16 ஆகஸ்ட் 2023 (11:51 IST)
50க்கும் மேற்பட்ட போலி பேஸ்புக் கணக்குகளை தொடங்கி அதன் மூலம் பெண்களிடம் ஆபாசமாக சாட்டிங் செய்த இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் 
 
நாமக்கல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலி பேஸ்புக் கணக்குகளை தொடங்கிய முருகேசன் என்பவர் அதன் மூலம் பெண்களிடம் தொடர்பு கொண்டு  ஆபாசமாக  சாட்டிங் செய்ததாக தெரிகிறது.
 
இதனை அடுத்து அவர் மீது  காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து முருகேசனை கைது செய்தனர். இந்த நிலையில் முருகேசனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அந்த பகுதி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் முருகேசன் இடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும்  அவர் மீது போக்சோ  சட்டம் பாயும் என்று பொதுமக்களிடம் போலீசார் உறுதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்