நடுக்கடலில் குளிக்க சென்ற இளைஞர்கள் பலி

செவ்வாய், 16 ஜனவரி 2018 (15:03 IST)
வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத் துறையில் கடலில் குளித்த இளைஞர்கள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 
தமிழகம் முழுவதும் காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் ஆற்றுக்கும், கடற்கரைக்கும் சென்று பொழுதை கழிப்பது வழக்கம். இந்நிலையில் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத் துறையில் நடுக்கடலில் குளிக்க 19 இளைஞர்கள் படகு ஒன்றில் சென்றுள்ளனர்.
 
நடுக்கடலில் குளித்துக் கொண்டிருந்த போது 5பேர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் திருவாரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணும் பொங்கலை மக்கள் அதிகளவில் கூடும் மெரினாவில் நேற்றே பாதுகாப்பு தடை போட்டு குளிக்க தடை விதித்தனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்