பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து...திருமணத்திற்குச் சென்ற 45 பேர் படுகாயம்

திங்கள், 27 மார்ச் 2023 (16:45 IST)
தேவனூர் கல்வெட்டு திருப்பத்தின் இன்று தனியார் பேருந்து விபத்தில் சிக்கியது. இதில், 45 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

அரியலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகேயுள்ள கார்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவ மகேஸ்வரிக்கும், அரியலூர் மாவட்டம் செந்துறையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற இளைஞருக்கும் இன்று காலையில் திருமண  நிகழ்ச்சி  நடைபெற்றது.

எனவே, மணமகளின்  வீட்டார், மற்றும் உற்றார் உறவினர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒரு தனியார் பேருந்தில், செந்துறைக்குச் சென்றிருந்த நிலையில், திருமணம் முடிந்து, இன்று காலை மீண்டும் தங்கள் ஊருக்குக் கிளம்பினர்.

இந்த நிலையில், தேவனூர்  கல்வெட்டு திருப்பத்தில் பேருந்து திரும்பியபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த, ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என மொத்தம் 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து, உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் ஜெயங்கொண்டான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது, அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்