பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிக்கு 44 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு-அமைச்சர் தங்கம் தென்னரசு!

J.Durai

வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (08:34 IST)
விருதுநகர்மாவட்டம் காரியாபட்டியில் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந் நிகழ்விற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அசோக்குமார் தலைமை வகித்தார்.
 
நிதி மற்றும் மனித வள மேலாண்மை  துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்
 
அப்போது அவர் பேசியதாவது.......
 
தமிழ்நாட்டில் மாண்புமிகு தமிழக  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இயங்கி வரும் அரசு கல்வித் துறையில் மாபெரும் மறுமலர்ச்சி  உருவாக்க கூடிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 
 
கடந்த மூன்று ஆண்டுகளாக கல்வித்துறையில் இதுவரை யாரும் கொண்டு வராத அற்புதமான   திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு செய்து அவற்றை  நிறைவேற்றியும்  வருகிறார். 
 
குறிப்பாக நம்முடைய பகுதிகளில் இருக்கக்கூடிய பல்வேறு பள்ளிக்கூடங்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் நாம் அதிக  கவனத்தை செலுத்தி இருக்கிறோம். 
 
இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி துறையின் சார்பில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது .ஒரு அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ்  இயங்கி வரும் நெடுஞ்சாலை , போக்குவரத்து துறை, தொழில் துறை, சுகாதாரத்துறை   அல்லது பொதுப்பணித் துறை உள்ளிட்ட  பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  
 
மக்களுக்கு நன்மைகளை செய்யக்கூடிய துறையை ஏராளமாக இருந்தாலும் இந்த  துறைகளுக்கும் ஒதுக்கக்கூடிய நிதியை காட்டிலும்  பள்ளிக் கல்விக்கு துறைக்குத் தான் அதிகமான நிதியை            முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டார்.    
 
தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறை வளர்ச்சிக்கு  44 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிதியின் மூலமாக பள்ளி கட்டிடங்கள் பள்ளிக்கு தேவையா ன அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள் பணியிடம் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்படும் மாணவர் களின்  எதிர்கால முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு 12ம் வகுப்பு படித்து விட்டு உயர் கல்வி பயில முடியால் இருக்கும்  மாணவி களுக்குபுதுமை பெண்                     திட்டம் கொண்டு வரப்பட்டது.      
 
உயர் கல்வி பயிலும் மாணவியர் களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபா  வழங்கப்பட்டு வருகிறது.அத்தோடு  மாணவர்கள் உயர்கல்விக்காக         தவப்புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்  கொண்டு வந்துள்ளார்.  
 
ஒரு நாடு முன்னேற்றம் கண்டு தன்னிறைவு பெறுவதற்கு கல்வியும், சுகாதாரமும் முன்னேற்றம் அடைந்திருக்க வேண்டும்.அதனால் தான் நாட்டில் கல்வி வளர்ச்சிக்காக தி.மு.க அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
 
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த வரை பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப் படுகிறது.தமிழக அரசு வழங்கும்  விலையில்லா  மிதிவண்டிகள் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 17,726 மிதிவண்டிகள் வழங்கப் பட்டுள்ளது.
 
காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி க்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று என்னிடம் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆசிரியர்களின் கோரிக்கையை   ஏற்றுக் கொண்டு மாணவிகளின் நலன் கருதி பள்ளிக்கூடத்திற்கு தேவையான வகுப்பறைகள் கழிவறைகள் ஆய்வகம்  போன்ற கட்டிடங்களை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போன் என்று உறுதி கூறுகிறேன். என்று பேசினார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்