40% கல்விக் கட்டணம்...பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

புதன், 7 ஜூலை 2021 (15:51 IST)
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரொனா  3 வது அலை பரவும் அபாயமுள்ளதால் இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும்,  விஞ்ஞானிகளும் எச்சரித்துள்ளனர். தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் இன்னும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் திறக்கபடாத நிலையில் ஆன்லைன் வழியாகக் கற்றல் நடைபெற்று வருகிறது.

எனவே, தமிழகப் பள்ளி ஆணையர், தமிழகத்தில் தனியார்  பள்ளிகளில் ஆகஸ்ட் 31 க்கு முன்  40% மட்டுமே வசூலிக்க வேண்டுமெனவும்,பள்ளிகள் திறந்தபின்னர் 2 மாதத்திற்குள் வசூல் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
 
 மேலும் தனியார் சுயநிதிப் பள்ளிகள் இரண்டு தவணைகளாக 75% கட்டணங்கள் மட்டுமே வசூல் செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்