வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைது!

J.Durai

திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (20:41 IST)
கோவை செட்டிபாளையம் அருகே நேற்றைய தினம் நான்கு பேர் கொண்ட கும்பலால் வழக்கறிஞர் உதயகுமார் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்......
 
கொலை வழக்கில் 8 தனிப்படை போலீசார் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தபட்டதில் 12 மணி நேரத்தில் 4 பேரை கைது செய்துள்ளோம்.அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் நான்கு பேரும் கோவையை சேர்ந்தவர்கள்.அய்யனார் என்ற செல்வம்,மற்றும் கௌதம் ஆகியோர் வழக்கறிஞர் உதயகுமாருடன் காரில் சென்றுள்ளனர்.அப்போது வழக்கறிஞர் உதயகுமாருக்கு கொடுத்த 30 லட்சம் பணத்தை அய்யனார் என்ற செல்வம் திருப்பி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.வாக்குவாதம் முற்றவே செட்டிபாளையம் அருகே காரை நிறுத்தி அய்யனாரின் நண்பர்களான அருண்குமார் மற்றும் அபிஷேக் ஆகிய இரண்டு பேரை வரவழைத்து காரில் வழக்கறிஞருடன் சென்ற அய்யனார், கௌதம் உள்ளிட்ட நான்கு பேரும் அறிவாளால் வழக்கறிஞர் உதயகுமாரை வெட்டி கொலை செய்துள்ளனர்.இந்த கொலை வழக்கில் கார், இரு சக்கர வாகனம் ,அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை மட்டுமே இந்த கொலைக்கான காரணம் என எஸ்பி தெரிவித்தார்.
 
மேலும் இந்த வருடம் கொலை வழக்கு குறைந்துள்ளது.சோஷியல் மீடியாவை கண்காணிக்க  தனி குழுக்கள் உள்ளதுகல்லூரிகளில் மாணவர்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாவட்டத்தில்போதை பொருள் விற்பனை  செய்பவர்களை கைது செய்து வருகிறோம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்