தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்து வருகின்றது. இதனால் இந்த பகுதியில் உள்ள நீர்நிலைகள் குறிப்பாக ஏரிகள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன
சென்னையிலும் இரண்டு நாள் மழையில் செம்பரப்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 150 மி.கனஅடி அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் 308 மி.கனஅடி இருந்த நீர் இருப்பு இன்று 452 மி.கனஅடியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 85.40 அடி என்பது குறிப்பிடத்தக்கது.