தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதுவரை தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,753ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் மட்ட்டும் பாதிப்பு எண்ணிக்கை 9000 ஐ நெருங்குகிறது. இந்நிலையில் இந்நிலையில் சென்னையில் கொரோனா நிலவரம் தொடர்பாக கொரோனா தடுப்பு அதிகாரி ராதாகிருஷ்னன், மாநகராட்சி ஆணையர் இன்று அளித்த பேட்டியில் கொரோனா நிலவரம் குறித்து பேசியுள்ளனர்.
அப்போது பேசிய ராதாகிருஷ்ணன் ‘தமிழகத்தில் கொரோனாவால் இறப்போர் விகிதம் 0.7 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் குடிசைப்பகுதிகள் 1970 இடங்கள் கண்டறியப்பட்டு நோய்தடுப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் 33 வார்டுகளில் கொரோனா பாதிப்பு சவாலாக உள்ளது. ராயபுரம், கோயம்படு உள்ளிட்ட இடங்கள் சவாலாக உள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம்’ எனத் தெரிவித்துள்ளார்.