மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 743 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 557 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,364 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 3,791 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5,461 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கத்தில் 1,300, திரு.வி.க நகரில் 1,079, தேனாம்பேட்டையில் 1,000, தண்டையார்பேட்டையில் 881, அண்ணா நகரில் 783 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.