செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க இந்த இரண்டையும் செய்ய வேண்டும்: சட்ட வல்லுனர்கள்..!

Mahendran

புதன், 28 பிப்ரவரி 2024 (15:22 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சட்ட வல்லுநர்கள் இது குறித்து கருத்து தெரிவித்த போது இரண்டு முக்கிய விஷயங்களை தெரிவித்துள்ளனர். 
 
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த பல மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் சிறையில் உள்ளார். அவரது ஜாமீன் மனு உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்று விட்ட நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போது இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் மட்டும் போதாது என்றும் அவர் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
அதுமட்டுமின்றி தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என்றும் இந்த இரண்டும் நடந்தால் மட்டுமே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர். 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அசோக்குமார் ஆஜாராவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்