அதற்கு ஒத்துக்கொள்ளாததால் சித்ரவதைகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியா திரும்ப வேண்டும் என அவர்கள் சொன்னதை அடுத்து அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்களை அழைத்துச் சென்ற ஏஜெண்ட்டும் உறவினர்களிடம் முறையான பதிலளிக்காமல் இழுத்தடித்துள்ளார். இதையடுத்து நடந்த விஷயத்தை இந்தியாவில் உள்ள உறவினர்களிடம் சொல்ல அவர்கள் திருச்சி மாவட்ட ஐ.ஜி,யிடம் இதுபற்றி புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலிஸார் திருவாரூரைச் சேர்ந்த ஏஜெண்டுகளை கைது செய்து விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.