ரயிலில் பட்டாக்கத்தியுடன் ரகளை செய்த 3 மாணவர்கள் கைது

புதன், 19 ஜூலை 2023 (13:13 IST)
சென்னையில் மின்சார ரயிலில்  அபாய சங்கிலியை இழுத்து ரகளையில் ஈடுபட்ட 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் வேளச்சேரி பறக்கும் ரயிலில்  நேற்று கல்லூரியில் படித்து வரும் சிலர் சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேசனில் ஏறியுள்ளனர். இங்கிருந்து கடற்கரை ரயில் நிலையம் வரை மாணவர்கள் தொடர்ந்து பயணிகளுக்கு இடையூறு செய்ததுடன் ரகளையும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் கைகளில் பட்டாக்கத்தி மற்றும் பைகளுடன் அட்டகாசம் செய்த  நிலையில், அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால், சுமார் அரைமணி நேரம் அந்த ரயில் நிறுத்தப்பட்டது.

நேற்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீஸார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக, ரகளையில் ஈடுபட்டதாக  கல்லூரி மாணவர்கள் 3 பேரை  போலீஸார் கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்