எடப்பாடி பழனிச்சாமி மீது புகார்: ஆர்.எஸ்.பாரதி மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்..!

செவ்வாய், 18 ஜூலை 2023 (11:42 IST)
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நெடுஞ்சாலைத்துறையில் ரூபாய் 4,800 கோடி டெண்டர் முறைகேடு என புகார் அளிக்கப்பட்ட நிலையில் இந்த புகார் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
  
நெடுஞ்சாலை துறையில் ரூபாய் 4800 கோடி டெண்டர் முதலீடு செய்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது ஆர்எஸ் பாரதி சிறப்பு புலனாய்வு விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 
 
இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் 2018 ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது என்றும் ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற கருத்து தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்