தமிழகத்திற்கு மேலும் 3 ரயில்கள் இயக்கமா? எங்கெங்கு தெரியுமா?

வியாழன், 4 ஜூன் 2020 (10:28 IST)
தமிழகத்திற்கு மேலும் 3 ரயில்களை இயக்க கோரி தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 
 
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது, இதனால் பொதுச்சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
அந்த வகையில் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் ஐந்தாவது கட்ட ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளில் பொதுபோக்குவரத்தும் துவங்கியது. 
 
அந்த வகையில் தமிழகத்தில் 4 பகல் நேர ரயில்கள் இயங்கி வருகிறது. இதனோடு திருச்சி - செங்கல்பட்டு இடையே அரியலூர், விழுப்புரம் மற்றும் தஞ்சை, மாயவரம், விழுப்புரம் வழியாகவும், அரக்கோணம் - கோவை இடையே காட்பாடி, சேலம் வழியாக இன்டர்சிட்டி ரயில் இயக்கவும் தமிழக அரசு கோரியுள்ளது.
 
இதுவரை இயக்கப்பட்டு வரும் ரயில்கள்:  
1. கோயம்புத்தூர் - மயிலாடுதுறை ஜன சதாப்தி சிறப்பு ரயில்
2. மதுரை - விழுப்புரம் இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில்
3. திருச்சி - நாகர்கோவில் அதிவிரைவு ரயில்
4. கோயம்புத்தூர் - காட்பாடி இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்