முதல்வர் மறைவு எதிரொலி: பள்ளி, கல்லுரிகளுக்கு 3 நாள் விடுமுறை

செவ்வாய், 6 டிசம்பர் 2016 (00:35 IST)
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


 

கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டதாகவும், அவர் விரும்பும் நேரத்தில் வீட்டுக்கு செல்லலாம் என அப்பல்லோ நிர்வாகம் கூறியது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து கடந்த 19ஆம் தேதி அன்று சிறப்பு பொதுப்பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு நேற்று முன்தினம் [ஞாயிற்றுக்கிழமை] மாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக அவர் சிகிச்சை பிரவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை ஒட்டி பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு மூன்று நாட்கள் [செவ்வாய்கிழமை, புதன் கிழமை மற்றும் வியாழக்கிழமை] விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்