28 ஊழல் கட்சிகள் பிரதமர் மோடியை எதிர்க்கிறார்கள்- அண்ணாமலை

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (13:04 IST)
தமிழக  பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள்  என்ற பாதயாத்திரை   மேற்கொண்டு வருகிறார்.

இந்த  நிலையில், அண்ணாமலை தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’நேற்றைய மாலை என் மண் என் மக்கள்  பயணம், ராசராசபுரம் எனும், பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமன் கோவில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் தலமான,  பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது வந்ததாகக் கூறப்படும்  தாராபுரம் தொகுதியில், மாபெரும் அரசியல் மாற்றத்திற்கு தயாராக இருக்கும் பெரும் மக்கள் திரள் சூழ சிறப்பாக நடைபெற்றது.

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மீதோ, அவரது அமைச்சரவையில் இருக்கும் 78 அமைச்சர்கள் மீதோ ஊழல் குற்றச்சாட்டு வைக்க முடியாது. பிரதமர் மீது ஊழல் குற்றச்சாடு வைத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால், திமுக காங்கிரஸ் கூட்டணியான இந்தி கூட்டணியின் சாதனை, யாருமே செய்யாத அளவுக்கு ஊழல் செய்ததுதான். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற ஊழல் கட்சிகள் அனைத்தும் இணைந்து, தங்கள் குடும்பத்தினர் அதிகாரத்துக்கு வருவதற்காகவே கூட்டணி அமைத்திருக்கிறார்கள். திமுக காங்கிரஸ் உள்ளிட்ட 28 ஊழல் கட்சிகள் இணைந்து. ஊழலற்ற ஏழை மக்களுக்கான, நேர்மையான ஆட்சி தரும் நமது பிரதமர் மோடி அவர்களை எதிர்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’திமுக தனது குடும்பம் அதிகாரத்தில் இருக்கத்தான் ஆட்சி நடத்துகிறதே தவிர மக்களுக்கான ஆட்சி இல்லை. மக்கள் கோபம் அவர்கள் மீது திரும்பும்போது, இந்தித் திணிப்பு என்று பொய் சொல்லுவார்கள். மோடி அவர்கள் தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார். பாராளுமன்றத்தில் தமிழர்களின் செங்கோல் அலங்கரிக்கிறது. திமுக தமிழுக்குச் செய்தது என்ன? வரும் பாராளுமன்ற தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்க, தமிழகம் இந்த முறை துணையிருக்கும். ஊழல் குடும்ப திமுக காங்கிரஸ் கூட்டணி, மக்களால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ‘’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்