வெள்ளத்தில் பலியான 2500 நாட்டுக்கோழிகள் – புலம்பும் விவசாயி!

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (10:24 IST)
நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் கோழிப் பண்ணையில் இருந்த 2500 கோழிகள் பலியாகியுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பி ஆர் குப்பம் பகுதியில் வசிக்கும் விவசாயி மோகன், தனது இடத்தில் நாட்டுக்கோழி பண்ணை வைத்திருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வீசிய நிவர் புயலால் பெய்த கன மழையில் பொன்னை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகமாக மோகனின் கோழிப் பண்ணையில் நீர் புகுந்துள்ளது.

இதில் விற்பனைக்காக வைத்திருந்த 2500 கோழிகள் வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளன. அதே போல கோழிகள் இருந்த கொட்டகை மற்றும் தீவனம் ஆகியவையும் சேதமாகியுள்ளன. மீதம் இருந்த 3000 கோழிகளை காப்பாற்றியுள்ளனர். இதனால் மோகனுக்கு 3 லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தனக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என மோகன் கோரிக்கை வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்