25 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸா? எடப்பாடி அரசு பிழைக்குமா?

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (05:01 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 25 எம்.எல்.ஏக்கள் நேற்று இரவு திடீரென ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். இவர்கள் அனைவரும் தினகரனின் ஆதரவாளர்கள் என்பதும் இன்று இவர்கள் அனைவரும் கவர்னரை சந்திக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



 
 
கவர்னரின் சந்திப்பின்போது எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவு வாபஸ் என்ற கடிதம் கொடுத்தால் முதல்வரை பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிடுவார்
 
அதிமுகவில் உள்ள 135 எம்.எல்.ஏக்களில் 25 பேர் ஆதரவு வாபஸ் பெற்றால் 110 எம்.எல்.ஏக்கள் மட்டுமே எடப்பட்டி பழனிச்சாமிக்கு ஆதரவு இருக்கும் என்பதால் அரசு கவிழும் ஆபத்து உள்ளது. இதனால் இன்று முழுவதும் தமிழக அரசியல் பரபரப்புடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்