பிளஸ் 2 மறுதேர்வு எழுத 23 பேர் மட்டுமே விண்ணப்பம்!

சனி, 31 ஜூலை 2021 (13:01 IST)
பிளஸ் 2 மறுதேர்வு எழுத இதுவரை 23 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். 

 
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சமீபத்தில் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில் இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் விருப்பதேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக சில நாட்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 
 
இந்நிலையில் விண்ணப்பங்களுக்கான தேதி முடிந்த நிலையில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.  இதனை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
 
இதனிடையே இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, பிளஸ் 2 மறுதேர்வு எழுத இதுவரை 23 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகளின் கருத்துக்களை கேட்ட பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும். தனியார் பள்ளிகளில் 100% கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்