24 மணி நேரத்தில் 22 பேர் பலி: சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா

வெள்ளி, 29 மே 2020 (11:28 IST)
கடந்த சில நாட்களாகவே சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரிந்ததே. இருப்பினும் சென்னையிலும் சரி தமிழகத்திலும் சரி கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கை குறைவாக இருந்தது பொதுமக்களுக்கு ஆறுதல் அளித்தது. மேலும் கொரோனாவால் குணமாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததும் ஒரு ஆறுதலான செய்தியாக இருந்தது 
 
இந்த நிலையில் சென்னை மக்களுக்கு பேரதிர்ச்சியாக கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஏழு பேர்களும், ஓமந்தூரார் மருத்துவமனையில் நான்கு பேர்களும், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் எட்டு பேர்களும் கீழ்பாக்கம் மருத்துவமனையில் இரண்டு பேர்களும், வீட்டில் சிகிச்சை பெற்று வந்த ஐடி ஊழியர் ஒருவரும் என மொத்தம் 22  பேர்கள் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர் 
 
மேலும் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதில் ராயபுரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிகம் பாதிக்கப்பட்ட 6 மண்டலங்களில் ராதாகிருஷ்ணன் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குழுக்கள் தினந்தோறும் இந்த ஆறு மண்டலங்களில் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்