இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,706 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 71,106 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 59,546 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,982 பேர் பலியான நிலையில் 18,616 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 19,372 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 15,562 பேரும், டெல்லியில் 16,281 பேரும், ராஜஸ்தானில் 8,067 பேரும், மத்திய பிரதேசத்தில் 7,453 பேரும், உத்தர பிரதேசத்தில் 7,170 பேரும் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.