தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: யார் யாருக்கு எந்த துறை?

புதன், 26 மே 2021 (07:19 IST)
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்தவுடன் தலைமைச் செயலாளர். டிஜிபி உள்பட பல ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 21 அதிகாரிகள் இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பெயர்கள் பின்வருமாறு:
 
1. உயர்கல்வித்துறை செயலராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
2.பள்ளிக்கல்வித்துறை செயலராக காக்கர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
3. சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலராக சுப்ரியா சாகு நியமிக்கப்பட்டுள்ளார்.
 
4. வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை செயலராக ஜோதி நிர்மலா சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
5. ஊரக வளர்ச்சி, மற்றும் உள்ளாட்சித்துறை முதன்மை செயலராக கே.கோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
6. பொதுப்பணித்துறை கூடுதல் முதன்மை செயலராக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
7. சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலத்துறை செயலாராக அருண்ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
8. போக்குவரத்து துறை கூடுதல் முதன்மை செயலராக தயானந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
9. ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலராக மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
10.வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை முதன்மை செயலராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
11. நகர்புற வளர்ச்சி, வீட்டுவசதித்துறை முதன்மை செயலராக ஹித்தேஷ் குமார் மக்வானா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
12. தொழிலாளர் நலம் மற்றும் திறன்மேம்பாட்டு பயிற்சி செயலராக கிர்லோஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
13. பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிறபட்டோர் நலன் சிறுபான்மை நலத்துறை செயலராக கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
14. நெஞ்சாலை மற்றும் துறை முகம் முதன்மை செயலராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
15. சுற்றுலா, கலாச்சார, ஹிந்து சமய அறநிலையத்துறை செயலராக சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
16. வேளாண், விவசாய நலன்துறை ஆணையாளராக சமயமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
17. சமூகநலன் மற்றும் மதிய உணவு திட்டத்துறை செயலராக ஷாங்கோ, கலோலிகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
18. மாற்றுத்திறனாளி நலத்துறை செயலராக லால்வீனாநியமிக்கப்பட்டுள்ளார்.
 
19. எரிசக்தித்துறை முதன்மை செயலராக தர்மேந்திரபிரதாய் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
20. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலராக மைதிலி ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
21. பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்