20 -வயது பெண்ணின் மரணக் கிணறு சாகசம் ...ஆடியன்ஸ் ஆச்சர்யம் !!

Webdunia
புதன், 11 செப்டம்பர் 2019 (18:36 IST)
நமது தமிழ்சினிமாவில் பழைய படங்களில் மரண சாகச கிணறு ஒன்றைப் பார்த்திருப்பீர்கள்.. அதில்,  ஹீரோ தன் உயிரை பணயம் வைத்து, அதனுள் சென்று, சாகசம் செய்து  காட்டி பைக்  ஓட்டுவார். அதைப் பார்க்கின்ற நமக்கும் திக்.. திக் என்று இருக்கும். அதிபோன்று, இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு பெண் மரணக்கிணறு சாகசம் செய்து அசத்தி வருகிறார்.
இந்தோனேஷியா நாட்டிலுள்ள டக்கோன் என்ற இடத்தில் ஒரு கேளிக்கை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அதில் சுமார் 10 மீட்டர் உயரம் கொண்ட உருண்டை வடிவிலான மரணக் கிணறு ஒன்று இருக்கிறது.இதில், தலைக்கு ஹெல்மெட் கூட அணியாமல், தேவி அப்ரிலியானி என்ற பெண் தொடர்ந்து சாகசம் செய்து மக்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கிறார்.
 
இதுகுறித்து தேவி அப்ரிலியானி கூறியதாவது :
 
பெண்களாலும் சாதிக்க முடியும். என்பதை நிரூபிக்கவே நான் இந்த சாகசத்தில் ஈடுபட்டு வருகிறேன். நான் இந்த சாகசத்தில் 3 ஆண்டுகளாக ஈடுபட்டுவருகிறேன்.  இந்த மரணக்கிணற்றில் வாகனம் ஓட்டும் போது, பைக்கை மணிக்கு 100 கிமீ வேகத்தில் ஒட்டுவேன் என தெரிவித்துள்ளார். 
 
மேலும், இந்த சாகத்தில் தேவி அப்ரிலியானி ஈடுபடும் போது, நாளொன்றுக்கு அவருக்கு ஊதியமாக அம் இந்திய மதிப்பில் ரூ. 500 கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளர். அவரது சாகசத்தைப் பார்க்க தினமும் பல ரசிகர்கள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்