அரசு கலைக்கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர்கள்: அரசு அனுமதி

வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (08:13 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தாலும் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
 
சமீபத்தில் பொறியியல் கல்லூரி மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் சேர்க்கப்பட்டனர் என்பதும், ஆன்லைன் மூலமே சான்றிதழ் பதிவேற்றம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத மாணவர்களை சேர்க்க அரசு அனுமதி அளித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இந்த கல்வி ஆண்டில் அதிக அளவில் மாணவர்கள் கல்லூரியில் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளதை அடுத்து கல்லூரிக் கல்வி இயக்ககம் கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களின் அனுமதி பெறவும் கல்லூரி நிர்வாகத்திற்கு கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதைவிட கல்லூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கே பெரும்பாலான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்