வேலை தேடி வந்த 3 பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய வாலிபர்கள்

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (15:19 IST)
ஈரோடு மாவட்டத்தில் வேலைதேடி வந்த 3 பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


 

 
சேலம் மாவட்டம் சங்ககிரி மூலக்காடு மோரூர் பகுதியை சேர்ந்த சதீஸ் குமார் என்பவர் அவரது நண்பரை பார்க்க ஈரோடு மாவட்டத்துக்கு சென்றுள்ளார்.
 
அங்கு 2 பேர் சதீஷ் குமாரிடம் விலாசம் கேட்பது போல் பேச்சு கொடுத்து, உல்லாசமாக இருக்க எங்களிடம் பெண்கள் உள்ளனர் என்று கூறியுள்ளனர்.
 
பின்னர் சதீஷ் குமாரை அந்த 2 பேரும் ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த வீட்டில் 3 பெண்கள் இருந்துள்ளனர். அந்த பெண்களிடன் சதீஷ் குமார் சாதரணமாக பேசியுள்ளார்.
 
அந்த பெண்கள், ‘வேலை தேடி வந்த எங்களை கணேசனும், சிவகுமாரும் அழைத்து வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்தனர். பிறகு வேலைக்கு போனால் அதிக பணம் கிடைக்காது. விபாசாரத்தில் தான் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி எங்களை இங்கு வைத்துள்ளனர். எங்களை காப்பாற்றுங்கள்’’ என்று கூறியுள்ளனர்.
 
சதீஷ் குமார் அந்த 2 நபர்களிடம், பணம் சற்று குறைவாக உள்ளது அருகில் உள்ள ஏடிஎம் போய் எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு, காவல் துறையினரிடம் தகவல் கொடுத்துள்ளார்.
 
அதன்பேரில் காவல் துறையினர் அந்த மூன்று பெண்களையும் மீட்டு, 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்    
அடுத்த கட்டுரையில்