ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: மீட்பு பணியினர் போராட்டம்

வெள்ளி, 25 அக்டோபர் 2019 (20:54 IST)
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 30 அடி ஆழத்தில் உள்ள ஆழ்துளை கிணறு ஒன்றில் இரண்டு வயது குழந்தை விழுந்து விட்டதை அடுத்து அந்த குழந்தையை உயிருடன் மீட்க தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர் 
 
மணப்பாறை அருகே உள்ள ஒரு பகுதியில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை வீட்டின் அருகில் தோண்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணறு ஒன்றில் திடீரென தவறிய விழுந்து விட்டது 
 
இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ஆழ்துளை கிணறை ஆய்வு செய்தபோது அந்த ஆழ்துளை கிணறு 30அடி ஆழத்தில் இருப்பதாகவும் அதில் குழந்தை 10 அடி ஆழத்தில் உட்கார்ந்த நிலையில் சிக்கி இருப்பது தெரியவந்தது 
 
இதனை அடுத்து குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் ஆழ்துளை கிணற்றில் செலுத்தப்பட்டது. மேலும் குழந்தையின் அழுகுரல் கேட்பதால் குழந்தை உயிருடன் இருப்பதும் உறுதிசெய்யப்பட்டது
 
இதனை அடுத்து ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு தற்போது ஆழ்துளை கிணற்றை சுற்றிலும் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. குழந்தைக 10 அடி ஆழத்தில் மட்டுமே இருப்பதால் எளிதில் குழந்தையை உயிருடன் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்