2 மணல் குவாரிகளும், சட்ட விதிகளை மீறி அனுமதி! ஆட்சியரிடம் மனு!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (00:19 IST)
கரூர் மாவட்டம் நெரூர் வடக்கு மல்லம்பாளையம் மற்றும் நன்னியூர் ஆகிய 2 மணல் குவாரிகளும், சட்ட விதிகளை மீறி அனுமதி கொடுத்து அமைத்துள்ளது என என கண்டன கோஷமிட்டவாரு சமூக ஆர்வலர்கள்  கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். 
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சமூக செயற்பாட்டாளர் முகிலன்,நன்னியூர் மல்லம்பாளையம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மணல் குவாரியும் ஆய்வு செய்தோம், மிகப்பெரிய அதிர்ச்சி உள்ளது,ஏற்கனவே மணல் எடுக்கப்பட்ட இடத்தில் தற்போது மணல் குவாரி அமைக்கப்பட உள்ளது அந்த இடத்தில் மணலும் இல்லாமல் தான் உள்ளது,சட்ட விதிகள் மீறி அப்பகுதியில் குவாரி அமைந்துள்ளது.
 
போலியான ஆவணங்கள் கொடுத்த  அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், உயர்நீதிமன்றம் ஆய்வு மேற்கொண்டு என்ன என்ன தவறுகள் இருக்கின்றன என சொன்னார்களோ அதே தவறுகள் தற்போது செய்கின்றனர் எனவே மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறினார்.
 
பேட்டி: முகிலன் சமூக செயற்பாட்டாளர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்