சென்னையை மிரட்டும் டெங்கு காய்ச்சல்: 2 குழந்தைகள் பரிதாப பலி

திங்கள், 22 அக்டோபர் 2018 (11:30 IST)
சென்னையில் டெங்கு பாதிப்பால் 2 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வருடத்திற்கு வருடம் டெங்குவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. டெங்கு என்பது ஒருவரின் உயிரையே பறிக்கக்கூடிய ஒரு கொடிய நோயாகும். இந்நோய் ஏடிஸ் ஏகிப்டி(AEDES AEGYPTI) என்ற ஒரு வகை கொசுவால் பரப்பப்படுகிறது.
 
இந்நிலையில் சென்னை மாதவரம் சந்தோஷ்நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரது இரட்டைக் குழந்தைகளான தக்சன், தீக்சா ஆகியோருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது.
 
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 
 
தொடர்ந்து மருத்துவக்கண்காணிப்பில் இருந்த அந்த இரட்டைக்குழந்தைகள் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தனர். இதனால் அவர்களது பெற்றோர் சோகத்தில் ஆழ்துள்ளனர்.
 
காய்ச்சல் ஏற்பட்டால் மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்